சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 6
-------------------------------------------------
புகார்க் காண்டம்
---------------------------------------
1. மங்கல வாழ்த்துப் பாடல்
-------------------------------------------------
போற்றுவோம் வெண்ணிலவை;
போற்றுவோம் வெண்ணிலவை
பூந்தாது சிந்தும் மலர்மாலை அணிந்த மன்னனின்
குளிர் வெண்குடை போல் ,அழகிய உலகைக்
கருணையோடு காப்பதால் ,
போற்றுவோம் கதிரவனை; போற்றுவோம் கதிரவனை
காவிரிநாடனின் ஆணைச் சக்கரமாய்
பொன்சுடர் வீசும் மேருமலைச் சிகரத்தை
வலம் வந்து உலகைச் சுற்றிவருவதால்
போற்றுவோம் மாண்புள்ள மழையை :
போற்றுவோம் மாண்புள்ள மழையை
அச்சுறுத்தும் கடல் சூழ்ந்த உலகை
சோழனின் கருணை போல்
சூழ்ந்து நின்று பெய்து காப்பதால்
போற்றுவோம் பூம்புகாரை;
போற்றுவோம் பூம்புகாரை;
பெருகும் நீர்வேலியாகி நின்று
உலகைக்காக்கும் கடல் போல்
சோழன் குலத்தோடு புகழ்
ஓங்கி விளங்கி வருவதால்
பொதிகையே ஆனாலும் இமயமே ஆனாலும்
போவதை நீக்கி நகர் துறந்து அறியாத
பழங்குடி மாந்தர் வாழும்
பொதுமைவுணர்வுள்ள புகார் நகரே ஆயினும்
அழிவற்ற நிலைபேறு உள்ளவை அவையென நிறுவி
மறுப்போ மாறுதலோ கூறார்
முடிந்த மெய்யுணர்வை முழுவதும் அறிந்த உயர்ந்தோர்;
ஆகவே,
நாகலோகத்துத் தலைநகரொடும், நாகநாட்டோடும்
நிகரான போகமும், நெடிய புகழும் கொண்ட புகார் நகரில்,
வான் மழை போன்ற வள்ளன்மை கொண்ட மாநாய்கன்
குலக்கொம்பின் அருளினால் தோன்றிய கொடி போன்றவள்
பன்னிரண்டாண்டு வயதுள்ளவள் குறைவில்லா அழகுள்ள
திருமகளின் புகழ்மிக்க வடிவுள்ளவள் என்றும்
தீமையற்ற அருந்ததியின் கற்பு த்திறன் இவள் திறன் என்றும்
புகாரின் பெண்மக்கள் போற்றும், பெருங்குணத்தை விரும்புகிற
கண்ணகி என்னும் பெயர்கொண்டவள் ;
செந்தாமரையில் வீற்றுள்ள லக்ஷ்மியின் புகழ் மிக்க
வடிவம் கொண்டவள் என்றும்
தீமையற்ற அருந்ததி நட்சத்திரத்தின் ஆற்றல் இவள் ஆற்றல் என்றும்
புகாரின் மக்கள் தொழுது போற்றும்
விரும்பத்தக்க உயர்ந்த குணங்களை நேசிப்பவள்
கண்ணகி என்ற பெயர் கொண்டவள் என்பவளுக்கும்
பெரு நிலம் முழுவதையும் ஆளுகின்ற மாமன்னன்
தலைமைக்குடிகள் என்று ஒதுக்கி வைத்த
ஒரு தனிச்சிறப்புள்ள குடிகளோடு உயர்ந்து
ஓங்கி வளரும் செல்வவளம் பெற்றவனும் ,
வருகின்ற செல்வத்தையெல்லாம் பிறர்க்கு வழங்குவோனும்,
சங்க நிதி, பதும நிதி என்ற இருநிதியுமுடையோனான
மாசாத்துவான் என்பவனின் மகனும், பதினெட்டு வயதுள்ளவனும்,;
பூமியைத் தேய்க்கும் புகழ் கொண்டவனும்
இசைவென்ற சொல்லினோரும்
நிலவுமதி முகமுமுள்ள பெண்களின்
பெண்களின் கூட்டத்தில் நம் கண்கள் கா ணும்
முருகன் என்று புகழ்ந்து அவனைக்
காதலோடு போற்றும் சிறப்புடைய
கோவலன் என்ற பெயர் கொண்டவனுக்கும்
ஒரு நல்ல நாளில் திருமணம் செய்விப்பது என்று
இரு குடும்பத்தலைவரும் மகிழ்ச்சியோடு முடிவெடுத்து
மங்கலம் கூறும் மகளிரை யானை மீதேற்றி
மாநகருக்குச் செய்தி அறிவித்தனர்

No comments:
Post a Comment