சிலப்பதிகாரம்(புதுக்கவிதை வடிவில்)-5
-------------------------------------------------------------------
உரைபெறு கட்டுரை
--------------------------------------------------
பாண்டிய நாடு கண்ணகியால்
எரிக்கப்பட்ட அன்று முதல்
மழை வளம் குன்றி
வறுமையுற்றது , வெப்பு நோயும்
கொப்புளமும் மக்களைத் தொடந்தன,
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்,
பொற்கொல்லர் ஆயிரம் பேரைக் கொன்று
கண்ணகிக்குக்களப்பூசை செய்து
விழா எடுத்து சாந்தி செய்ய,
நாடு நிரம்பிய மழை பெய்தது;
நோயும், துன்பமும் நீங்கியது
அது கேட்டறிந்து கொங்கு மண்டலத்து
இளங்கோக்களான கோசர்கள்
தம் நாட்டிலும் கண்ணகிக்கு
விழா எடுத்து சாந்தி செய்ய
பெய்யும் மழையும்,தொழிலும்
மாறாதாயின.
அது அறிந்த கடல் சூழ்ந்த இலங்கையின்
மன்னன் கயவாகு கண்ணகிக்கு
நாள் தோறும் வழிபாடு காண
பலிபீடம் உள்ள கோயில் அமைத்து
'துன்பம் துடைத்து கோரிய
வரம் தருபவள் இவள்' என
உறுதி கூறி ஒவ்வோர் ஆண்டும்
ஆடி மாதத்தில் அங்கே ஒரு
பெரு விழாவினை பலமுறை எடுப்பித்தான்.
அங்கு மழை நிலைத்து நின்று பெய்தது;
பல வளங்கள் பெருகி(இலங்கை)
தவறாத விளைச்சல் உள்ள நாடானது
அதைக் கேள்வியுற்று சோழன் பெருங்கிள்ளி
உறையூர்அரசவையில் 'எவ்வகையாலும் வரம் தரும்
இவள் ஒரு பத்தினிக் கடவுள் ' என்று அறிவித்து
கண்ணகிக்குப் பத்தினிக் கோயில் அமைத்து
நாள்தோறும் விழாவும், பூசையும் நிகழச்செய்தான்
இளங்கோக்களான கோசர்கள்
தம் நாட்டிலும் கண்ணகிக்கு
விழா எடுத்து சாந்தி செய்ய
பெய்யும் மழையும்,தொழிலும்
மாறாதாயின.
அது அறிந்த கடல் சூழ்ந்த இலங்கையின்
மன்னன் கயவாகு கண்ணகிக்கு
நாள் தோறும் வழிபாடு காண
பலிபீடம் உள்ள கோயில் அமைத்து
'துன்பம் துடைத்து கோரிய
வரம் தருபவள் இவள்' என
உறுதி கூறி ஒவ்வோர் ஆண்டும்
ஆடி மாதத்தில் அங்கே ஒரு
பெரு விழாவினை பலமுறை எடுப்பித்தான்.
அங்கு மழை நிலைத்து நின்று பெய்தது;
பல வளங்கள் பெருகி(இலங்கை)
தவறாத விளைச்சல் உள்ள நாடானது
அதைக் கேள்வியுற்று சோழன் பெருங்கிள்ளி
உறையூர்அரசவையில் 'எவ்வகையாலும் வரம் தரும்
இவள் ஒரு பத்தினிக் கடவுள் ' என்று அறிவித்து
கண்ணகிக்குப் பத்தினிக் கோயில் அமைத்து
நாள்தோறும் விழாவும், பூசையும் நிகழச்செய்தான்
No comments:
Post a Comment