சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 8
[2. மனையறம்
படுத்த காதை ]
-----------------------------------------
சொல்லற்கரிய சிறப்பும்
மன்னரே விரும்பும் செல்வமுமுடையது.
போக பூமி என விளங்கும் பூம்புகார்.
வணிகர் நிறைந்து வளம் சிறந்து,
முழங்கும் கடல் சூழ்ந்த உலகம்
ஒரு சேரத் திரண்டு வந்தாலும் ,
வழங்கப்பின் வாங்காத வளமுடையது .
அரும் பொருள் தரும் புதுமை நாடுகள்
ஒன்றுகூடித்திரண்டு கடல்வழியும்
தரைவழியுமாக ஈட்டிய செல்வம்
குவிந்திருந்தன நகரெங்கும்;
குலப்பெருமை குன்றாத செறிந்த
செல்வக்குலத்தோர் , அச்செல்வத்தின்
பயனான ஈகைத் தவம் செய்வோர்
தானப் பயன் தரும் போகபூமியினர்.
பெருமலர்க் கண்ணி கண்ணகியும்,
காதல் கணவன்
கோவலனும்
ஏழு அடுக்கு மாளிகையில் இடைப்பட்ட
நான்காம் அடுக்கில், மயனால் செய்தது போன்ற,
மணிகள் இழைத்த கால்களையுடைய
கட்டிலின்மீது மகிழ்ந்திருந்தனர்.
கழுநீர், ஆம்பல், முழுநெறிக் குவளை,
அரும்பு
பொதி அவிழ்ந்த வண்டு ஒலிக்கும் தாமரை
வயற்பூ
வாசம் நுகர்ந்து; அயற்பூ
மேதகு
தாழை விரியல் வெண் தோட்டுக்
சண்பகக்காவில் மாலை போலப் பூத்திருக்கும்
மாதவி மலர், எனப் பலமலர்களின்
தாதினை ஆராய்ந்து உண்டு;
ஒளிவீசும் முகமுடைய மகளிரின்
சுருண்ட கருங்கூந்தலின்
மணத்தைப் பெறுவதற்கு ஏங்கி
வழிகாணாது திரியும் வண்டுகளுடனும்
மணிக்கோவையால் ஒழுங்கு வரிசையில்
அமைத்த எழில் சாளரத்தின் ஊடே
குறுகிய புழைகளில் நுழைந்த
மணத்தென்றலைக் கண்டு,
காதல் மிகுந்து , எழுநிலை மாடத்தின்
இடைநிலம் நீங்கி, மலர்க்கணையுடன்
காமன் வீற்றிருக்கும் நிலா முற்றமான
ஏழாவது மாடிக்குச் சென்றனர். .[தொடரும்]

No comments:
Post a Comment