Thursday, 29 June 2017

சிலப்பதிகாரம் புதுக்கவிதை வடிவில்-2

சிலப்பதிகாரம் புதுக்கவிதை வடிவில்-2 
------------------------------------------------------------------
ஆத்தி மாலை சூடிய சோழனின் 
நீங்காத சிறப்பினை உடைய 
மூதூராம் புகார் நகரில் வாழ்ந்த 
கோவலன் என்றோர் வாணிகன் அந்நகரில்
நாடகத்தால் புகழ் பெற்ற 
நாடகப் பொதுமகளாகிய மாதவியோடு 
உறவு கொண்டுப்பழகிய வகையில் 
அரிதாக ஈட்டிய பொருளை எல்லாம் 
இழந்ததன் காரணமாக கண்ணகி எனப்படும் 
மனைவியோடு இசைபாடும் அவளது 
காற்சிலம்பை விற்க வேண்டி 
பாடற்  சிறப்புடைய பாண்டியனின் 
பெரும்புகழ் பெற்ற மாடமதுரையில் நுழைந்தான்.
மக்கள் போற்றும் வணிகவீதியில் அச்சிலம்பைக்
கையில் ஏந்திசென்றவன்,
பொன்செய்யும் கொல்லனிடம் காட்ட,
"அரசி கோப்பெருந்தேவிக்கு அன்றி இச்சிலம்பை 
அணியும் தகுதி பிறர்க்கில்லை" என்று 
அதைத் தன்  கையில் வாங்கி,
முன்பு தான் களவாடி. 
தொலைந்தது என்று  மன்னனிடம் 
மறைத்து விட்ட  சித்திர வேலைப்பாடுள்ள 
சிலம்பைக் "கண்டேன் ஒரு கள்வன் கையில்"  என 
மன்னனை அணுகிக்கூற [தொடரும்]

1 comment:

  1. ஒரு சிக்கலோடு தொடங்குவது நல்ல படைப்பிற்கு அடையாளம்...இம்முயற்சி வெற்றியடையும் என்பதற்கு இதுவே சான்று

    ReplyDelete